தமிழ்லீடர்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பதில் பொறுப்பதிகாரியாக எம்.ஐ.அப்துல் வஹாப் நியமனம்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.அப்துல் வஹாப் கடந்த மாதம் 31 ஆந் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.மென்டிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட லோஜேஸ்ரிக் (கட்டுமான அபிவிருத்தி) பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் பாரியளவில் நடைபெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் குழுக்களிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதேவேளை, குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து கடமையினை திறம்பட ஆற்றியிருந்த நிலையிலே, குறித்த பொலிஸ் பரிசோதகர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கிழக்கு மாகாண பொது மக்கள் தொடர்பாடல் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரெட்ணம் அவர்களின் பிரத்தியேக உதவியாளராகவும்  செயலாற்றியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

Add comment

Recent Posts

%d bloggers like this: