தமிழ்லீடர்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது.

கிளிநொச்சி மாவட்டம் பளை பகுதியில் இன்று அதிகாலை காலை இடம்பெற்ற விபத்தில் மீசாலையை சேர்ந்த நபர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிலந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ஹயேர்ஸ் ரக வாகனம் வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதியதனாலேயே இந்த கோர விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த சம்வத்தில் யாழ்ப்பாணம் மீசாலை மேற்கை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்தலேயே பலியாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் இவர் குறித்த ஹயேர்ஸ் ரக வாகனத்தின் ஓட்டுநருக்கு அருகில் முன் ஆசனத்தில் இருந்தவர் என கூறப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து புதிதாக கொள்வனவு செய்யப்பட ஹெயேர்ஸ் வாகனமே இந்த விபத்தில் சிக்கியுள்ளது என பொலிஸாரால் வீதியோரத்தில் தடுத்து வைக்கப்பட்ட டிப்பர் ரக வாகனத்துடனேயே இது மோதியுள்ளது என கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் ஹயேர்ஸ் ரக வாகனத்தைச் செலுத்தி வந்தவரும் பிறிதொருவரும் காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: