தமிழ்லீடர்

கொழும்பு கோட்டையில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

கொழும்பு – கோட்டை, லோட்டஸ் வீதியில் இன்று பிற்பகல் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினாலும் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பு – கோட்டை லோட்டஸ் வீதியில் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அதேவேளை, லோட்டஸ் சுற்றுவட்டத்தை அண்மித்த வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாகவும்,
இதனைத் தொடர்ந்து பொலிஸாரால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவும், மேலும் சில கோரிக்கைகளை வைத்தும் பல்கலைக்கழக மாணவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.                               

Add comment

Recent Posts

%d bloggers like this: