கொழும்பு துறைமுக நகர நிர்மாணப்பணிகள் நேற்றுடன் நிறைவு.

கொழும்பு துறைமுக நகர நிர்மாணத்திற்கு கடலை ஆழப்படுத்தும் நடவடிக்கை நேற்றுடன் முடிவடைந்தது.

கொழும்பு துறைமுக நகரம் 269 ஹெக்டேயர் பரப்பில் நிர்மாணிக்கப்படவிருந்ததாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடுத்தகட்டமாக கொழும்பு துறைமுக நகரின் நிர்மாணம் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருப்பதாக,மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் துறைமுக நிர்மாண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதிநவீன வசதிகள் கூடிய வகையில் கொழும்பு துறைமுக நகரம் நிர்மாணிப்பதுடன், கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பை இணைக்கும் வகையிலான அதிவேக வீதியும் நிர்மாணிக்கப்படவிருப்பதும், குறிப்பிடத்தக்கது.                               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: