தமிழ்லீடர்

கோட்டாபய ராஜபக்‌ஷ அரச நிதி மோசடி தொடர்பான விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.

டீ.ஏ ராஜபக்‌ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணப்பணிக்காக அரச நிதியான 33.9 மில்லியன்களைதவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னால் பாதுகாப்புச் 

செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் மேலும் 7 நபர்களுக்கு எதிராக தெடுக்கப்பட்டிருந்த வழக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை ரத்துச் செய்த மூவர் அடங்கிய உயர் நீதிமன்றம் குறித்த வழக்கை விசாரணை செய்யுமாறு தீர்பளித்துள்ளது.

அதாவது குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேக நபர்கள் குற்றவாளிகளா? அல்லது நிரபராதிகளா ? என்பதனை முடிவெடுக்கப்படல் வேண்டும் என்பதாக தீர்ப்பாகியது.குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 22ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: