தமிழ்லீடர்

க.பொ.த.சா.த.பரீட்சை தொடர்பில் இலங்கை வானொலியில் நேரலை இன்று.

எதிர்வரும் மார்கழி மாதம் 3ஆம் திகதி முதல் நடைபெறவிருக்கும்  சா.தர பரீட்சைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் நேரடி வானொலி ஒலிபரப்பு நிகழ்வு இன்று  28ஆம் திகதி புதன்கிழமை  பி.ப 3மணி தொடக்கம் பி.ப. 4.30 மணிவரை இலங்கை வானொலியில் இடம்பெறவுள்ளது.

சந்தேகமுள்ளவர்கள் தொலைபேசி வாயிலாக வானொலியுடன் தொடர்பு கொண்டு சந்தேகங்கலை தெலிவு செய்து கொள்ளமுடியும், என்று  நடைபெறவிருக்கும் க.பொ.த.சா.த.பரீட்சை தொடர்பில் விளக்கமளித்த இலங்கைப் பரீட்சைகள் திணைக்கள உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-இலங்கை பரீட்சைகள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள அந்நிகழ்ச்சியில் கூறப்படும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு சந்தேகங்களுக்கு தெளிவுகாணமுடியும்.

இம்முறை க.பொ.த. சா.தரப்பரீட்சை டிசம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகி 12ஆம் திகதி வரை ஒன்பது(9) தினங்கள் நடைபெற்று நிறைவடையும்.

(10 நிமிட வாசிப்புநேரம் முதற்றடவையாக…) கடந்த க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் 3மணித்தியாலம் இரண்டாம் பத்திரத்தை வாசித்து விளங்குவதற்காக முதன்முதலாக ஒதுக்கப்பட்ட பத்துநிமிடநேர வாசிப்பு நேரம் இம்முறை முதன்முதலாக சா.த.பரீட்சைக்கும் அறிமுகப்படுத்தப்படும்,இங்கும் இரண்டாம் பத்திரத்திற்கு மாத்திரமே 10நிமிடம் வழங்கப்படும்.

தினமும் காலையில் 8.30மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும்,பிற்பகலில் 1.00 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும்,ஆக டிசம்பர் 11ஆம் திகதி நடைபெறவிருக்கும் சித்திரப்பாட 2ஆம் பிரிவுக்கான பரீட்சை மாத்திரம்  1.15நிமிடத்திற்கு ஆரம்பமாகும்.

(மேலதிக மேற்பார்வையாளர் கண்காணிப்பில்..) ஒவ்வொரு பரீட்சை நிலையத்திற்கும் மேலதிக மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பரீட்சை நிலையத்தினுள் பரீட்சார்த்திகள் இலத்திரனியல் உபகரணங்களைக் கொண்டுவரஅனுமதிக்கக்கூடாது நோக்குனர்களும் தொலைபேசி பாவிக்கக்கூடாது மேற்பார்வையாளர்கள் பரீட்சை விடயம் தொடர்பாக மட்டும் அமைதியாக தொடர்புகளை வைத்துக்கொள்ளமுடியும். 

எந்தக்காரணம்கொண்டும் பரீட்சைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது தேசிய அடையாளஅட்டையுடன் அங்கீகரிக்கப்பட்ட ஆளடையாள அட்டைகள் மூலம் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

இணைப்பாளர்கள் 02ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை நிலையத்தினுள் இருக்கவேண்டும் எக்காரணம்கொண்டும் வெளியேறமுடியாது.

இதேவேளை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் பாடசாலைகளுக்குக் கிடைக்கபெற்றும் சில பாடசாலை அதிபர்கள் அவற்றை மாணவர்களுக்கு வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையென பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக பரீட்சைத்திணைக்களம் பரீட்சையை நேர்த்தியாகவும் நம்பகமாகவும் இறுக்கமாகவும் செய்துவருவதையொட்டி சகலரும் பாராட்டுத்தெரிவிக்கின்றனர் அதேவேளை இப்படியான ஒருசில அதிபர்களுக்கெதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: