சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கவே தீவிர முயற்சி.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை களமிறக்க கட்சியின் உறுப்பினர்கள் எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைமைத்துவம் செயற்பட்டு வருகிறது என
அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்  உரையாற்றும் போது
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“பொன்சேகாவும் மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியுமெனின் கட்சியின் பிரதித் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியாதா?” என கேள்வி எழுப்பியுள்ள அவர், “சஜித் பிரேமதாஸ களமிறங்கினால்  வெற்றிப் பெறுவார் என்பதை நாம் நிருபிப்போம்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.                               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: