தமிழ்லீடர்

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!

கெசெல்கமு ஓயாவில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த  நால்வரை, இன்று பொலிஸார் கைது ​செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் பலாங்கொடை மற்றும் பொகவந்தலாவை ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களெனத் தெரிவித்த பொலிஸார், இவர்கள் அகழ்வுக்காக பயன்படுத்திய உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளார்கள்.

மேலும் இவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: