தமிழ்லீடர்

சந்திரிகா குமாரனதுங்கவை கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து நீக்க ஜனாதிபதி முடிவு.

ஐந்துநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடு திரும்பியதும் அதிரடி மாற்றங்கள் சிலவற்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பல அமைப்பாளர்களை அந்த பதவிகளிலிருந்து நீக்கவுள்ளதாக அந்த தகவல் கூறுகின்றது.இதுதவிர முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரனதுங்கவை கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து நீங்கவும் அவர் முடிவெடுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சந்திரிகா ஐக்கியதேசியக் கட்சி சார்பாக நடப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் கொடுத்துவருவதாகவும் தெரியவருகிறது. கடந்த ஆட்சிக் குழப்பத்தின் பின்னர் ஜனாதிபதிக்கும் சந்திரிகாவுக்குமிடையில் கடும் பனிப்போர் நிலவிவருகின்றமை குறிப்பிடதக்கது.

எனினும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் சேர்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அண்மையில் சந்திரிகா மைத்திரியிடம் பொதுவெளியில் கேட்டுக்கொண்டார். சிறிலங்கா சுதந்திரக்கட்சி சந்திரிகாவின் தந்தையாரால் ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: