தமிழ்லீடர்

‘சாலி’க்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்.

நீ்ர்கொழும்பு – கொப்பரவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வளர்த்துவந்த ‘சாலி’ என்ற பெயருடைய நாயை, இனந்தெரியாதவர்கள்  மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்ட சம்பவத்தையடுத்து, இன்று நீர்கொழும்பு பிரதேசத்தில், மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக, save a pet with love என்ற மிருகங்களை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில், மிருகங்களை பாதுகாக்கும்  அனைத்து அமைப்புக்கும் அழைப்பு விடுப்பதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, சாலி எனப்படும் லெப்ரடோ வகையை சேர்ந்த நாயை இவ்வாறு தீயிட்டு கொளுத்திய நபர் பற்றி  தகவல்கள் தெரியுமாயின், உடனடியாக அறிவிக்கும்படியும் குறித்த நபரை கண்டுபிடிக்க உதவி செய்யும் நபருக்கு 1இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்படுமென்றும், save a pet with love அமைப்பால் தெரிவித்துள்ளார்கள்..

மேலும் நாளை (05) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இவ்விடயம் குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்கள்.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: