சாவகச்சேரியில் வர்த்தகர்களுக்கு தண்டம்!!!

காலாவதியான திகதியுடன் உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத ஐந்து வர்த்தகர்களுக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று 19 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

மேற்படி யாழ்.மாவட்ட பாவனையாளர் விவகார அதிகாரசபை அலுவலர்கள் தென்மராட்சி பிரதேசத்தில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது, கண்டு பிடிக்கப்பட்ட திகதி காலாவதியான பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த நான்கு வர்த்தகர்களுக்கும் வர்த்தக நிலையத்தில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத வர்த்தகருக்கும் எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குகள் தனித்தனியாகத் தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது வர்த்தகர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, திகதி காலாவதியான பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்த நான்கு வர்த்தகர்களுக்கு மொத்தமாக 18 ஆயிரம் ரூபாவும், பொருள்களின் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத வர்த்தகருக்கு ஆயிரத்து 500 ரூபாவும் தண்டம் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: