தமிழ்லீடர்

சிகரெட் பாவனையை தடைசெய்ய பிரேரணை முன்வைப்பு!!!

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரெட் பாவனையை முற்றாக தடைசெய்யவேண்டும் என பிரதேசசபை உறுப்பினர் கா.பார்த்தீபனால் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

மேற்படி பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது குறித்தவிடயம் தொடர்பான பிரேரணை ஒன்று கா.பார்த்தீபனால் முன்வைக்கபட்டிருந்தது.

அதற்கமைய பிரதேசசபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கவேண்டும் என்று அவரால் கோரப்பட்டது.

மேலும் இவ்விடயம் தொடர்பாக பிரதேச சபைக்கு அதிகாரங்கள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அடுத்து வருகின்ற அமர்வில் அதனை தீர்மானமாக எடுக்கலாம் என்றும் சபை உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே இவ்விடயம் தொடர்பாக சபையினால் ஆராய்ந்து சபைக்குட்பட்ட வர்த்தகசங்கத்தோடும் கலந்துரையாடி அடுத்த அமர்வில் தீர்மானமாக எடுப்பது என முடிவு காணப்பட்டிருந்தது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: