தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களினதும் இலங்கை அரச படைகளினால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களினதும் நினைவாக அவுஸ்திரேலியா சிட்னியில் ரொக்வூட் மயானத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலும் மாவீரர் நாள் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
இன்று (27) அவுஸ்திரேலியாவின் சிட்னி நேரம் மாலை 6.05 மணிக்கு ரொக்வூட் மயானத்தில் நினைவுத்தூபியில் விளக்கேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.