தமிழ்லீடர்

சிறப்பாக இடம்பெற்ற கனகாம்பிகைக்குளம் தூயதமிழின் திறப்பு விழா!

கனகாம்பிகைக்குளம் தூயதமிழ் சனசமூக நிலையத்தின் வாசிகசாலை திறப்பு விழாவும் விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளும் இன்று (06) மாலை நான்கு மணியளவில் சனசமூக நிலையத்திற்கென ஒதுக்கப்பட்ட கட்டடத்தில் தூயதமிழ் சனசமூக நிலையத்தின் உறுப்பினர்களில் ஒருவரான ப.உமாகேசன் தலைமையில் நடைபெற்றது. தூயதமிழ் சனசமூக நிலையத்திற்கு புதிய நிர்வாகம் அண்மையில் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் குறிப்பிட்ட நிகழ்வு இன்று விமர்சையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நிகழ்வின் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்குகள் விருந்தினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. மௌன இறை வணக்கத்தை அடுத்து ஒதுக்கப்பட்ட கட்டடத்தின் நாடாவினை வெட்டி வாசிகசாலை திறந்து வைக்கப்பட்டதன் பின்பு வயதுப்பிரிவின் அடிப்படையில் மகிழ்விக்கும் விளையாட்டுப்போட்டிகளும் நடைபெற்றது. இறுதியில் விருந்தினர்கள் உரையினைத் தொடர்ந்து தூயதமிழ் சனசமூக நிலையத்தின் பொருளாளர் லோ.சதீசனின் நன்றியுரையுடன் மாலை 5.30 மணியளவில் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கனகாம்பிகைக்குளம் கிராம அலுவலர் வா.ஜெயந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ப.குமாரசிங்கம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சி.திருநாவுக்கரசு ஓய்வு நிலை உள்ளக கணக்காய்வாளர் சி.நாகராசா கனகாம்பிகைக்குளம் அ.த.க பாடசாலையின் அதிபர் திரு.சிவனேசன் மற்றும் வர்த்தக உரிமையாளர் கா.சஞ்சீவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். மேலும் இந் நிகழ்வில் கனகாம்பிகைக்குள பொதுமக்கள் சிறுவர்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.

 

 

 

 

 

 

 

நாரதர்

Add comment

Recent Posts

%d bloggers like this: