தமிழ்லீடர்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்கள் பேசினர்.

இந்தியாவின் குடியரசு நாளை முன்னிட்டு கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில்- அரசியல் எதிரிகளாக இருக்கும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர்கள் சந்திரிகா குமாரதுங்கவும், மகிந்த ராஜபக்சவும் ஒரிரு வார்த்தைகள் பேசிக் கொண்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேற்படி இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 26ஆம் நாள், கொழும்பில் கலை நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சந்திரிகா குமாரதுங்கவும், மகிந்த ராஜபக்சவும் பங்கேற்றிருந்தனர்.அவர்கள் இருவரையும், மங்கள விளக்கேற்றுவதற்கு இந்தியத் தூதுவர் அழைப்பு விடுத்தார்.

மேலும் நீண்டநாட்களாகப் பேசிக் கொள்ளாத இருவரும், அந்த தருணத்தில் அருகருகே நின்றிருந்தனர். அப்போது, மகிந்த ராஜபக்ச மௌனத்தைக் கலைத்து, “ Madam எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.அதற்கு சந்திரிகா குமாரதுங்க உடனடியாக பதிலளிக்கவில்லை. அவர் வேறொங்கோ கவனம் செலுத்தியிருந்தார்.

சில நிமிடங்கள் கழித்து வாழ்த்துக்கள் என்று மகிந்த ராஜபக்சவிடம் கூறினார்.பிறகு அவர், “மன்னிக்கவும், இது உங்களுக்கு அல்ல, திருமணம் செய்து கொண்ட உங்களின் மகனுக்குத் தான்” என்று மகிந்த ராஜபக்சவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் சந்திரிகா.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: