சிறைச்சாலையில் கஞ்சாவுடன் வயோதிபத் தாயார் !!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு வழங்க என கொண்டு சென்ற உணவுப்பொதியில் கஞ்சா போதைப்பொருளை மறைத்துக் கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டில் வயோதிபத் தாயார் ஒருவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை சந்திக்க அவரது தாயாருக்கு நேற்றுமுன்தினம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அனுமதி வழங்கப்பட்டது. அவரிடம் இரண்டு உணவுப்பொதிகள் இருந்தன. அவற்றைச் சோதனையிட்ட போது ஒன்றில் சுமார் 100 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது.

எனவே தொடர்ந்து வயோதிபப் பெண் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

மேலும் “சந்தேகநபர் தனது மகனுக்கு சாப்பாடு எடுத்துச்சென்றார். அந்தவேளை, அங்கு வந்த ஒருவர் தனது உறவினர் தடுப்பில் இருப்பதாகவும், அவருக்கு சாப்பாடு வழங்கவேண்டும், தன்னிடம் அடையாள அட்டையில்லாததால் அனுமதி கிடைக்காது என்று தெரிவித்தார்.

அதனால் தனது உறவினருக்கான உணவுப்பொதியையும் சந்தேகநபரிடம் வழங்கி அதனை சேர்ப்பிக்குமாறு கேட்டார். அதனால் அவரது நிலையறிந்து சந்தேகநபர் அந்த உணவுப் பொதியையும் எடுத்துச்சென்ற போதே அதற்குள் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: