தமிழ்லீடர்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் பதவி சந்ரர்த்ன பல்லேகமவிற்கு.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் ( நிலையான அபிவிருத்தி) சந்ரரத்ன பல்லேகம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமனம்.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த சந்ரரத்ன பல்லேகம சிவில் பாதுகாப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டு, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராகவும், கடமையாற்றியுள்ளார்.

அத்துடன் 2013- 2015ஆம் ஆண்டு வரை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாகவும், கடமையாற்றியுள்ளார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சந்ரரத்ன பல்லேகம நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.                         

Add comment

Recent Posts

%d bloggers like this: