சீனா நிதியுதவி; ஏறாவூர் ஆதார வைத்தியசாலை நவீன வசதிகளுடன் புனரமைப்பு;

சீன அரசாங்கத்தின் 234 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் மட்டக்களப்பு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகள், சுகாதார போஷனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தலைமையில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானாவின் அழைப்பின்பேரில் சுகாதார போஷனை மற்றும் சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், மாகாண சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர்          எம்.எஸ் சுபைர், மாவட்ட அரசாங்க அதிபர்                           எம். உதயகுமார் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இந்நிதியின் மூலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நவீன வசதிகளைக்கொண்ட நோயாளர் விடுதி, மகப்பெற்று விடுதி, இரத்த வங்கி சத்திர சிகிச்சைக்கூடம், ஆரம்ப சிகிச்சைப்பிரிவு என்பன அமைக்கப்படவிருப்பதாகவும்,  அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் உள்ளிட்டோர் இங்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: