தமிழ்லீடர்

சீருடையுடன் தூக்கில் தொங்கிய மாணவன் சடலமாக மீட்பு!

மன்னார், மாந்தை மேற்கு பகுதியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவமொன்று நேற்றிரவு நடந்துள்ளது.

கருங்கண்டல் மகாவித்தியாலயத்தில், கல்வி கற்று வரும் ஜே.நிர்மலன் என்ற மாணவரே நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலன் வழமை போல் நேற்று காலை பாடசாலைக்கு சென்று வீடு திரும்பி இருந்தாரெனவும்,
மீண்டும் வீட்டில் இருந்து பாடசாலை சீருடையுடன் வெளியில் சென்றவர், இரவாகியும் வீடு திரும்பவில்லையென, உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நிர்மலனை காணவில்லை என, தேடிய போதே மணல் காட்டு பகுதியில் தூங்கில் தொங்கிய நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும்,
சம்பவம் தொடர்வில் அவ்விடத்திற்கு விரைந்த அடம்பன் பொலிஸார் சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக, தெரிவித்துள்ளார்கள்.

அதேவேளை, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.                             

Add comment

Recent Posts

%d bloggers like this: