சுகாதார ஊழியர்கள் வெற்றிடத்தை நிரப்புவதற்கான அனுமதி

வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக நிலவும் சுகாதார ஊழியர்கள் வெற்றிடத்தை நிரப்புவதற்கான அனுமதி மத்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் நீண்ட காலமாக நிலவும் சுகாதார ஊழியர்கள் வெற்றிடத்தினை நிரப்பும் வகையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு பல தடவைஐள் கோரப்பட்ட அனுமதியே தற்போது கிடைத்துள்ளது. இதன் பிரகாரம் 456 பேர் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

குறித்த நியமனத்தினால் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில் பாதிப்புடன் சுட்டிக்காட்டப்பட்டு வயதெல்லை மற்றும் கல்வித் தகமைகளில் உள்ள நெருக்கடி நிலமைகள் வடக்கு மாகாண பிரதம செயலாளரின் ஊடாக பொதுச் சேவை ஆணைக்குழு , திறைசேரி , சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் குறித்த நியமனத்தில் 70 வீதம் பெண்களும் குறைந்தது 30 வீதம் ஆண்கள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும் . அத்தோடு கல்வித் தகமை 9ம் தரமாகவும் வயது எல்லை 45 எனவும் கண்டிப்பான உத்தரவின் கீழ் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவற்றின் அடிப்படையில் மேற்படி நியமனம் இந்த ஆண்டின் நடுப் பகுதியில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: