சுனாமி பேரழிவுக்கு 14 ஆண்டுகள். 

தேசிய பாதுகாப்பு தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்ப்படுகின்றது. 2004ஆம் ஆண்டு சுனாமி  பேரலை ஏற்பட்டு 14 வருடங்கள் முடிவடைந்த நிலையில்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நிகழ்வுகளும் மத அனுஷ்டானங்களும் நடைபெறுகின்றது.

மத அனுஷ்டானங்களுக்கும், அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கும், இன்றையதினம் முன்னுரிமை அளிக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம்   தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான நிகழ்வு காலி மாவட்டத்தில் பெரலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்னால் காலை 9 மணிக்கு       நடைபெறவிருக்கிறது.

இதில் பிரதம அதிதியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம்,பாதுகாப்புப் படையினர்,பொலிஸார் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் தேசிய நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களிலும், சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரையில் இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: