தமிழ்லீடர்

சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் விபத்தொன்றில் சிக்கி அகால மரணமடைந்துள்ளார்.

சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் இன்று பிற்பகல் நடந்த வாகன விபத்தில் தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச் றேகன்ஸ்டோர்ப் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியரும் அப் பள்ளியின் முதல்வரின் துணைவியாருமான திருமதி சர்வாணி சுரேஸ்குமார் ( 43 வயது ) அகால மரணமானார்.

மேற்படி ஓவ்வொரு புதன்கிழமை பிற்பகலில் தமிழ் பாடசாலை நடைபெறுவது வழக்கமாகும். எனவே இன்று பிற்பகல் அவர் தனது காரில் பள்ளிக்குச் செல்லும் வழியில் விபத்தொன்றில் சிக்கி அகால மரணமடைந்துள்ளார்.

மேலும் கனரக வாகனம் ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கனரக வாகன சாரதியான 22வயது நபரும் காயமடைந்துள்ளார்.விபத்து நடந்த இடத்திலேயே இப்பெண் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: