தமிழ்லீடர்

சூரியசக்தி மூலமான மின்னுற்பத்திக்கு  அரசாங்கம் மறுப்பு!

சூரியச சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அனுமதிப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்து வருவதாக சூரிய சக்தி தொழில் துறை சங்கத்தின் செயலாளர் லக்மால் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

சூரியசக்தி மூலமான மின் பிறப்பாக்கியை அமைப்பதற்கு 3 வருடங்களாக 300 மூதலீட்டாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற 650 விண்ணப்பங்களை இலங்கை மின்சார சபை பரீசீலனை செய்யாது இருப்பதுடன், அனுமதி வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளது.

ஆகவே அத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.                               

Add comment

Recent Posts

%d bloggers like this: