ஜனாதிபதியினால் அநுராதபுர தொகுதிக்கான அமைப்பாளர்கள் நியமனம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி புத்தளம் மற்றும் அநுராதபுரம் ஆகிய தொகுதிகளுக்கான அமைப்பாளர்களை நியமித்துள்ளது.மேலும் இதன்படி கட்சியின் புத்தளம் மாவட்ட தலைவராக தயாஸ்ரீத திசேரா நியமிக்கப்பட்டுள்ளார்.நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் வைத்து இன்று பிற்பகல் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

இதனிடையே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அநுராதபுர மாவட்டத்திற்கான தொகுதி அமைப்பாளர்களும் இன்று நியமிக்கப்பட்டனர். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு,கலாவெவ தொகுதி – துமிந்த திசாநாயக்க,ஹொரவப்பொத்தான தொகுதி – வீரகுமார திசாநாயக்க,மதவாச்சி தொகுதி – திஸ்ஸ கரல்லியத்த,அநுராதபுரம் மேற்கு தொகுதி – டபிள்யு.பீ.ஏகநாயக்க,மிகிந்தலை தொகுதி – டபிள்யு.கே.இலங்கசிங்க,அநுராதபுரம் கிழக்கு தொகுதி – பேமசிறி ஹெட்டிஆரச்சி மற்றும் டி.பீ.பந்துசேன,கெக்கிராவ தொகுதி – ரொஹான் ஜயகொடி

அத்துடன் அனுராதபுர மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்களாக பி.பீ.திசாநாயக்க, எம்.ஹேரத் பண்டா, எம்.ஆர்.பீ.ஞானதிலக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: