ஜனாதிபதியின் தலைமையில் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ செயற் திட்டம் இறுதி நாள் நிகழ்வு இன்று!!!

இலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட “நாட்டிற்காகஒன்றிணைவோம்”தேசிய அபிவிருத்தி திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

மேற்படி இந்நிகழ்வில்  சத்துருகொண்டான் கிராமம் உற்பத்தி கிராமமாக  தெரிவு செய்யப்பட்டதுடன்.தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார  உதவிகள் வழங்கப்பட்டன.இதன் போது கிழக்கு மாகாண  ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் காணி  அமைச்சர் கயந்த கருணாதிலக்க  உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, புத்தளம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய  மாவட்டங்களை அபிவிருத்தி வேலைத்  திட்டங்களுக்காக தாம் தெரிவு செய்ததாகவும், இம்மாவட்டங்களில் சேவையாற்ற அமைச்சரவை  அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இல்லாமையே  அதற்கான காரணம் எனவும் மட்டக்களப்பின்  கிராமங்களில் 842 திட்டங்கள்ஙகடந்த சில  தினங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும்,போதைப் பொருட்கள் நாட்டிற்குள் கிழக்கு மாகாணத்தின் கடல் மார்க்கமாகவே  வருவதாக குறிப்பிட்டார்.அத்துடன் அவற்றை  ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை  எனவும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: