ஜனாதிபதியின் மூத்த மகள் சத்துரிக்காவும்,சிறிசேனவின் சகோதரன் டட்லியும் அரசியலில் இறங்கியுள்ளனர்.

ஜனாதிபதி சிறிசேனவின் புதல்வியான சத்துரிக்கா அரசியலில் குதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும் பிரபல தொழிலதிபருமான டட்லி சிறிசேனவும் அரசியலில் ஈடுபட முடிவுசெய்திருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனெனில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிமைப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும் அவரது அதிகாரத்தை கட்சிக்குள் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் இந்த அரசியற் பிரவேசங்கள் அமையப்போவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதியின் மூத்த மகளான சத்துரிக்கா தனக்கென சமூக வலைத்தளங்களில் ஆதரவுத் தளங்களை உருவாக்கிக்கொண்டிருப்பதாகவும் இதன் ஒரு அங்கமாகவே ஜனாதிபதித் தாத்தா என்ற நூலை இவர் வெளியிட்டிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், பணத்தாசையால் நாட்டின் அரசியல்வாதிகள் நாட்டை விலைபேசிக்கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக தான் தலைமைதாங்கி களத்தில் குதிக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.

மேலும் நாடானது ஒன்பது துண்டங்களாகப் பிரிபடப்போகும் அபாயத்தை தான் அறிந்துள்ளதாகவும் அந்த அபாயத்திற்கு எதிராக உயிர் அர்ப்பணிப்புடன் போராடப்போவதாகவும் தான் எதற்கும் பயந்தவன் இல்லை என்றும் கூறினார்.

இது நிகழ்ந்து சில மணித்தியாலங்களேயாகியுள்ள நிலையில் ஜனாதிபதியின் மூத்த புதல்வியும் சகோதரரும் அரசியலில் குதிக்கப்போவதான தகவல்கள் வந்துள்ளமை மஹிந்த தரப்பினரிடையே ஒருவித அதிர்வு நிலையினைத் தோற்றுவித்துள்ளதாக அறியமுடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: