ஜனாதிபதியைச் சந்திக்க வாய்ப்பளிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் மக்கள்!

புத்தளம் – அருவக்காடு கழிவு முகாமைத்துவ நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர், இன்று புத்தளத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியைச் சந்திக்க வாய்ப்பளிக்குமாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அதேவேளை, இன்றைய தினம், ஜனாதிபதி கலந்துகொள்ளவிருந்த சில நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தளம் பொலிஸார், இந்தப் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, நீதிமன்றத்தின் ஆணையைப் பெற்றுள்ள நிலையில், அந்த ஆணையையும் மீறி, ஆர்ப்பாட்டக்காரர்கள், தமது ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் பொலிஸாருடன், நீர் பவுசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: