ஜனாதிபதி தனது பதவியை துறந்து தேர்தல் ஒன்றிற்கு உத்தரவிடத் தயார்!!

தற்போதைய அரசியல் சூழலில் இலங்கை ஜனாதிபதி தனது பதவியை துறந்து தேர்தல் ஒன்றிற்கு உத்தரவிடத் தயாராவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடையும் நிலையில் பெரமுன ஓர் அரசியல் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தி சவாலான போட்டியாகவும் ஐ.தே.கட்சியும் அதிக சலுகைகளை வழங்கி ஓர் இடத்தினைப் பிடித்து பெரும் பலத்தை திரட்ட முயல்வதனால் உடனடியாக ஜனாதிபதி தனது பதவியை துறந்து தேர்தலிற்கு உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் தற்போது பெரமுனவில் அதிக செல்வாக்கு மிக்கவர்களான கோத்தபாய ராயபக்ச மற்றும் பசில் ராயபக சா ஆகியோர் இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் என்ற அடிப்படையில் போட்டியிட முடியாத நிலமை உள்ளதோடு மகிந்த ராயபக்சாவும் போட்டியிட முடியாத நிலமை உள்ளது. காலம் தாழ்த்தும் சமயம் இரட்டை பிரஜா உரிமையை துறந்து போட்டிக்கு தயாராக கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
.
இதேநேரம் ஐ.தே.கட்சியும் உடன் அதிக பலம் இல்லை எனக் கருதி எதிர் வரும் திங்கட் கிழமை புது வருட கொண்டாட்டங்களை நிறைவு செய்து தனது பதவியை துறந்து தேர்தலிற்கு உத்தரவிடவுள்ளதாக பெரிதும் நம்பப்படுகின்றது.

இவ்வாறு தேர்தலிற்கு உத்தரவிடப் பட்டு தேர்தல் பணியை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பிக்கின்றதா என்பதனை பெரமுன கட்சியும் ஆணைக்குழுவை தொடர்பு கொண்டுள்ளது. இதனால் குறித்த சம்பவம் மேலும் உறுதி செய்யப்படுவதோடு தேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு நாள் முழுவதும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: