தமிழ்லீடர்

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.

அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நடைபெறவிருப்பதாக அரசாங்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அமைச்சரவைக் கூட்டம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதித் தலைமையில் விசேட வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவிருப்பதால், இன்று அமைச்சரவை கூட்டத்தை நடத்தத் தீர்மானித்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை நேற்று இரவு அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர்களின் விசேட கூட்டம் நடைபெற்றதாகவும், இதன்போது நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டிய தகவல் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாவும், குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: