தமிழ்லீடர்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் இடையில் மோதல்!

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் எவ்விதமான உடன்பாடுகளும் இல்லாத நிலையில், நாட்டில் அபிவிருத்திகள் எதுவும் இடம்பெறாது என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரும், ஜனாதிபதியும் சண்டடையிடுவதுதான் தற்போதுள்ள பிரச்சினை என அவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய உரையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும், பிரதமரும் சண்டையிடும் போதும், அவர்களால் எதனையும் ஏற்றுக்கொள்ளாத போதிலும், நாட்டில் அபிவிருத்திகள் எதுவும் நடைபெறாத நிலையில், ஏற்கனவே இலங்கையில், ஆரம்பித்து விட்ட அனைத்து விடயங்களும் நிறுத்தப்பட்டுள்ளதெனவும், கடந்த நான்கு ஆண்டுகளாக நாட்டில் எதுவும் நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதெனவும், நாட்டிற்கு எந்த முதலீடும், கொண்டு வரப்படவில்லை. என
நாட்டில் அரசியல் உண்மைதன்மை இல்லாத போது முதலீடுகள் மேற்கொள்ளப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.                               

Add comment

Recent Posts

%d bloggers like this: