தமிழ்லீடர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன.

இதனையொட்டி ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இரவும் இன்று காலையிலும் மத அனுஷ்டானங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், நாடுபூராகவும் இன்றைய தினம் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், மொரஹாகந்த நீர்த்தேக்கத் திட்டத்தால் இல்லாமல் போன பழைய லக்கல நகருக்கு பதிலாக புதிய லக்கல நகரத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இன்று இடம்பெறவுள்ளது.

மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிறுவுனரும் முன்னாள் பிரதமருமான S.W.R.D பண்டாரநாயக்கவின் 120ஆவது பிறந்த தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சில நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: