தமிழ்லீடர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு; சந்திரிக்கா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் சிலர் தன்னை சந்தித்து நாட்டைப் போலவே கட்சிக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சினைகளால் தாம் கைவிடப்பட்டதாக தெரிவித்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின்  ​பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி மற்றும் குழுவினருடன் ஸ்ரீ.ல.சு கட்சி  இணைவதை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தன்னை வந்து சந்தித்த உறுப்பினரிடம் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை விட்டு வேறெந்த கட்சியுடனும் இணையாமல், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைப் பலப்படுத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.       

Add comment

Recent Posts

%d bloggers like this: