தமிழ்லீடர்

ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் சாவு

ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கார் ஒன்றும், பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது கம்பஹா – கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த இசுரு அபேதீர என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தில் உயிரிழந்த இசுரு அபேதீர என்ற இளைஞன் ஜப்பானின் Utsunomiya orion பாடசாலையில் கல்வி கற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுநிலா

Add comment

Recent Posts

%d bloggers like this: