தமிழ்லீடர்

ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மீண்டும் உத்தரவு.

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரைப் பிணையில் எடுப்பதற்கு முன்னின்ற அவரின் மனைவி மற்றும் அவரின் சகோதரியையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு ஏற்கனவே நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: