தமிழ்லீடர்

ஜெனீவா தீர்மானத்தை அரசு சரியாக பயன்படுத்த வேண்டும்

ஜெனீவாவில் தற்போது கொண்டுவரப்பட்ட 40/1 தீர்மானத்தை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வலியுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களும், காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கும் நிகழ்வும் வெபர் விளையாட்டு அரங்கில் நேற்று இடம்பெற்றது

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர்,

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக முன்னைய அரசு கூறியதைப் போன்று இந்த அரசாங்கமும் படைவீரர்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என கூறினால், அது தமிழ் மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகவே அமையும் என்றும் எனவே, உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீடித்து நிலைத்திருக்கும் அரசியல் தீர்வு விரைவாக கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலே இந்த அரசாங்கத்திற்கு தாங்கள் ஆதரவு வழங்கி வருவதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

எழுநிலா

Add comment

Recent Posts

%d bloggers like this: