டிப்பர் ரக வாகனம் மோதியதில் மகன் பலி! தந்தை படுகாயம்!!!

திருகோணமலை -ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இன்று டிப்பர் ரக வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மேற்படி இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கல்பிட்டி – கந்தகுலிய, குறிஞ்சாம்பிடிய பகுதியைச் சேர்ந்த தனுஷ்க மதுரங்க வயது 20 என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். மற்றும் அவரது தந்தை அன்டனி எலிஸ் ரொஷான் வயது 39 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே இந்த விபத்து தொடர்பில் தெரியவருகையில்,தந்தையும், மகனும் கல்பிட்டி பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி மீன் எடுப்பதற்காக பட்டா வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின் புறமாக வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியதாகவும் அதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பட்டா வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தந்தை படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: