தமிழ்லீடர்

தகவலை பேஸ்புக்கில் பதிவிட்டு தற்கொலை செய்த இளைஞன்!

தலவாக்கலை காவற்துறை பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சுமன சிங்கள மகா வித்தியாலத்திற்கு அருகாமையில் இன்று மாலை 3.30 மணியளவில் இளைஞன் ஒருவர் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன், நானுஓயா சமர்செட் பகுதியை சேர்ந்த.      எம். கிலின்டன் எலஸ்ட் வயது 24 என காவற்துறையினர், மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ள நிலையில்,
குறித்த இளைஞன் திடீர் என நீர்த்தேக்கத்தில் பாய்வதனை கண்ட பிரதேசவாசிகள், காவற்துறைக்கு அறிவித்ததை தொடர்ந்து காவற்துறையினர் மற்றும் கடற்படையினர் சேர்ந்து தேடியதில் சடலத்தினை சுமார் 4.30 மணியளவில் கண்டு பிடித்துள்ளனர்.

நீர்த்தேக்கத்தில் பாய்வதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பு குறித்த இளைஞன் மேற்படி பாய்ந்த நீர்த்தேக்கத்திற்கு முன்பு நின்று செல்பி புகைப்படம் எடுத்து தனது முகப்புத்தகத்தில் “END OF MY LIFE GOOD BYE GOD” என எழுதி புகைப்படத்தையும் பதிவிட்டு நீர்த்தேக்கத்தில் பாய்ந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இளைஞனின் சடலம் புலன் விசாரணையின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளபோதும், இவர் காதல் விவகாரம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணம் உண்டா? என தலவாக்கலை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.                             

Add comment

Recent Posts

%d bloggers like this: