தமிழ்லீடர்

தடை செய்யப்பட்ட மீனினங்கள், உலர் கடற்குதிரைகளுடன் இருவர் கைது!

இந்தியாவிலிருந்து படகு மூலம் கொண்டுவரப்பட்ட, பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட மீனினங்கள், உலர் கடற்குதிரைகள் என்பவற்றுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்று  பொலிஸாரால் கற்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, உலர் கடற்குதிரைகள் 130 கிலோகிராமும், பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட மீனினங்கள் 500 கிலோகிராமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் 31 மற்றும் 46 வயதுடையவர்கள், கற்பிட்டி – பள்ளிவாசல்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.     

Add comment

Recent Posts

%d bloggers like this: