தமிழ்லீடர்

தமிழர் தாயகத்தில்அகண்ட தேசம் அமைக்கதுடிக்கும் முஸ்லிம்கள் – வித்தகன்

தமிழர் தாயகத்தை ஒருபுறம் சிங்களப் பேரினவாதம் கூறுபோட்டு வருகின்றது. மறுபுறத்தில் சிறுபான்மை இனத்தவரும் – தமிழ் பேசுவோருமான முஸ்லிம்களும் தமிழர் பாரம்பரிய பூமியை கபளீகரம் செய்யும் முயற்சியில் இறங்கி விட்டனர். இதன் மூலம் தமிழர் தாயகத்துக்குள் அகண்ட முஸ்லிம் தேசத்தை நிலை நிறுத்த முயற்சிக்கிறார்கள். இது தமிழருக்கு மற்றொரு தலையிடியாக மாறப் போகிறது.

அம்பாறை மாவட்டத்தில் இப்போது பெரும்பான்மை இனத்தவராக இருக்கும் முஸ்லிம்கள் தமக்கெனத் தனியான மாவட்டம் ஒன்றைக் கோரி வருகிறார்கள். இந்தக் கோரிக்கையின் வலிமையால்தான் முல்லைத்தீவு, அனுராதபுரம் மாவட்டங்களை பிரித்து வெலிஓயா தனிச் சிங்கள மாவட்டத்தை அறிவித்து தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு மாகாணத்தை நிரந்தரமாகப் பிரிக்கும் நடவடிக்கைகள் தள்ளிப் போகின்றன.

இதற்கிடையே தமிழர் தாயகமான புத்தளம், மன்னார் மாவட்டங்களிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் புத்தளம் – அனுராதபுர எல்லைக்குள் வரும் வில்பத்து தேசிய வனத்தின் எல்லைக்குள் காடழிப்பை நடத்தி முஸ்லிம் குடியேற்றங்களை உருவாக்கி வருகிறார்கள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர்.

(காடழிப்புக்கு முன்னர் வில்பத்துக் காடு)

இதே அமைச்சர் ரிசாட் தலைமையில்தான், தமிழர் தேசமான முல்லைத்தீவின் கூழாமுறிப்பு, குமுழமுனை, முள்ளியவளைப் பகுதிகளில் காடுகளை அழித்து முஸ்லிம் குடியேற்றத் திட்டங்களை உருவாக்குகிறார்கள். இதேபோன்று மன்னாரிலும் அண்மையில் தாராபுரம் குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதேபோன்று புத்தளம் நோக்கி சிலாப பகுதியிலும் முஸ்லிம் குடியேற்றங்கள் புதிதுபுதிதாக முளைத்து வருகின்றன.

புத்தளம் மாவட்டம் தமிழர்களிடம் இருந்து சிங்களவர்களிடமும் முஸ்லிம்களிடமும் பறிபோயிருந்தது. புத்தளம், கற்பிட்டி என நகர்ப் புறங்களில் ஏராளமாக வாழும் முஸ்லிம்கள் இப்போது பல்கிப் பெருத்து சிங்களவர்களை நெருங்கி வருகிறார்கள். மன்னார் மாவட்டத்திலும் பெரும்பான்மை தமிழர்களுக்கு நிகராக வளர்ந்து வருகிறார்கள். இவ்வாறான நிலையிலேயே புத்தளம் – மன்னார் மாவட்டங்களில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளை இணைக்கும் விதமாக வில்பத்து முஸ்லிம் குடியேற்றம் ஏற்படுத்தப்படுகின்றது.

இதற்காக சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காட்டுப் பிரதேசம் அழிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடனேயே இந்தக் காடழிப்பு இடம்பெற்றது என்பது குன்றின் மேலிட்ட தீபமாக அனைவருக்கும் தெரிந்ததே. போர் காலத்தின் பின்னர் வடக்கின் பல மாவட்டங்களிலும் – குறிப்பாக வன்னி மாவட்டங்களில் வனவளத் திணைக்களத்துக்கு சொந்தமானவை என்று தமிழர்களின் காணிகள் வளைத்துப் போடப்படுகின்றன. இவ்வாறான நிலையில் தேசிய வனம் – பாதுகாக்கப்பட்ட வனம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் ஊடுருவி காடுகளை அழித்து குடியேற்றம் ஒன்றை உருவாக்கி விடுவது என்பது இலேசுப்பட்ட விடயமா – அல்லது ஓரிரு நாட்களில் நடத்தப்பட்டு விடும் விடயமா?

எது எப்படி இருந்தாலும் நமது தேசிய வளம் அழிகிறது என இப்போது சிங்கள மக்கள் அபாயக் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதை எதிர்க்கட்சியினரும் திட்டமிட்டுத் தூண்டி வருகின்றனர். தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் – நடத்தப்பட்ட படுகொலைகள் போல – முஸ்லிம்களுக்கு எதிராகவும் அடக்குமுறைகள் தோற்றுவிக்கப்படலாம் என்பதை கண்டி – திகன கலவரம் கட்டியம் கூறி நிற்கிறது. இவ்வாறான நிலையில் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கே உரிய சரணாகதி அரசியல் கைகொடுக்கும் நிலை ஏற்படும்.

(காடழிக்கப்பட்ட இடத்தில் முஸ்லிம் குடியேற்றம்)

இவ்வாறான நிலை தமிழர் தாயகத்தில் இருந்து துண்டாடப்பட்டு விட்ட வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டம் முற்றாக தமிழர் கைகளில் இருந்து பறிபோவதுடன், வடக்கு மாவட்டத்தையும் தமிழரின் பாரம்பரிய பூமியான புத்தளத்தையும் முற்றாக எம்மிடம் இருந்து பிரித்துவிடும் நிலை தோன்றும். வடக்கு மாகாணம் இவ்வாறு துண்டிக்கப்படுவதுடன் மட்டும் நின்று விடாது. தமிழரின் பூமியான மன்னார் மாவட்டத்தின் பெரும்பங்கு நிலப்பரப்பும் முஸ்லிம்களின் கைகளில் சென்றுவிடும் அபாய நிலை உள்ளது.

தமிழரிடம் இருந்து முஸ்லிம்களிடம் பறிபோன அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது போன்ற பிரதேச எல்லைப் பிரச்சினைகள் இங்கும் தலைதூக்கும். சனத்தொகை அதிகரிப்பை பலமாகக் கொண்டு இந்தப் பலப்பரீட்சையை முஸ்லிம்கள் இலகுவாக வெற்றி கொள்ளமுடியும். இதன் மூலம் மன்னார் – புத்தளத்தில் அகண்ட முஸ்லிம் பிரதேசத்தை அவர்கள் உருவாக்க முடியும். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை என தமிழர் தாயகத்தின் கிழக்கு மாகாணம் முழுமையாக முஸ்லிம்களின் கைகளில் வீழும் நிலையில், வடக்கை வீழ்த்துவதற்கு இந்த அகண்ட முஸ்லிம் தேசம் காரணியாக அமையலாம்.

தாயகத் தமிழர்கள் இப்போது விழித்துக் கொள்ளாவிட்டால், நாளை தமிழரின் தாயகம் வேறொரு இனத்தின் கைகளிலேயே இருக்கும்.

எழுநிலா

Add comment

Recent Posts

%d bloggers like this: