தமிழ்லீடர்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் பகிரங்க வேண்டுகோள்!!!!

சர்வதேச சமூகம் தனிப்பட்டவர்களின் பேச்சுக்கு உட்படாமல் உண்மையைக் கண்டறிய செயற்பட வேண்டும் என தமிழர்விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட்டி இற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இதனைக் கூறியுள்ளார்.

மேற்படி தமிழரசுக் கட்சி விடுதலைப்புலிகளுக்கு உரிய முறையில் ஆலோசனை வழங்காது, உற்சாகமூட்டி அவர்களை பின்னடையச் செய்துவிட்டு இன்று அவர்களுக்கு எதிரான யுத்தக்குற்றங்களை விசாரிக்குமாறு கேட்பது வேடிக்கையாக இருப்பதாக ஆனந்தசங்கரி கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.அவர்களின் செயற்பாட்டினாலேயே யுத்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, சர்வதேச சமூகம் இத்தகைய சந்தர்ப்பங்களில் தனிப்பட்டவர்களின் பேச்சுக்கு உட்படாமல் உண்மையாக செயற்பட வேண்டும் என வலியுறுத்துவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட்டிற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: