தமிழ்லீடர்

தமிழை பறைசாற்றி பெருமைப்படுத்திய தமிழ் மகன்! பல விருதுகளுடன் நாடு திரும்பினான்!

இலங்கைத்தீவின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் கோரக்கன் கிராமத்தின் இளம் கண்டுபிடிப்பாளர் சோமசுந்தரம் வினோஜ்குமார் சர்வதேச அரங்கில் தமிழர் பெருமையை ஓங்கி ஒலிக்க செய்த இளம் விஞ்ஞானி.மேற்படி கண்டுபிடிப்புகள் உருவ அளவில் பெரியதாகத்தான் இருக்கவேண்டும் என்ற கோட்பாட்டிற்குள் உட்பட்டதல்ல. சிறயவையாகவும் எழிய மக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையிலும் சர்வதேச சந்தையில் அவற்றிற்கான தேவையினை பொறுத்தே உத்தரவாதமும் தரமும் தான் கண்டுபிடிப்புக்களுகான அந்தஸ்த்தை உயர்த்துகின்றது என்பது இளம் கண்டுபிடிப்பாளன் வினோஜ்குமாரின் கருத்து.

எனவே சர்வதேச அறிவியல் புலமை, கண்டுபிடிப்பு மற்றும் தொழினுட்பக் கண்காட்சி மற்றும் மூன்று சர்வதேச விருதுகளும், ஐந்து நாடுகளுடைய விசேட சிறப்பு விருதுகளையும் தன்னகத்தே கொண்ட தமிழ் மகன் சோமசுந்தரம் வினோஜ்குமார்.கடந்த 2019. மாசி மாதம் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்கொஹ் நகரில் 97 நாடுகளைச்சேர்ந்த 1800 பல்கலைகழக மாணவர்கள் பங்குபற்றிய சர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்காட்சியில் தமிழர் பெருமையை வேஷ்டியில் பறைசாற்றியிருந்தார்.

மேலும் யாழ் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவில் இரண்டாம் வருட மாணவனுமாகிய வினோஜ்குமார் தமிழர் பண்பாடு கலாசாரத்தினை பிரதிபலிக்கும் முகமாக வேஷ்டி அணிந்து விருதினை பெற்றுக்கொண்டமை விருதை பெற்றுக்கொண்டதை விட கூடுதல் ஆதரவும் வாழ்த்துகளையும் தேடித்தந்தது.

1. SHOES’ HELPER எனும் கண்டுபிடிப்புக்கு பொதுப் பயன்பாடுகள் தொழினுட்ப பிரிவில் “சர்வதேச வெள்ளி விருதும்” , Association of British Investors & innovators of United Kingdom இருந்து SPECIAL PRIZE AWARD ,

Manila Young Inventors Association of Philippines இருந்து PHILIPPINES GOLD விருதும்,

02. TWO WHEELS’ HELPER எனும் கண்டுபிடிப்புக்கு பொறியியல் தொழினுட்ப பிரிவில் “சர்வதேச வெண்கல விருதும்” Macao Invention and Innovation Association of Macao இருந்து LEADING INNOVATION AWARD ,

Indian Innovator Association of India இருந்து SPECIAL INNOVATION விருதும்,

03. WIRE BUILDING TOOL எனும் கண்டுபிடிப்புக்கு கட்டிட நிர்மாண தொழினுட்ப பிரிவில் ” சர்வதேச வெண்கல விருதும்”, Citizen Inventor & Innovator Association of Singapore இருந்து OUTSTANDING INNOVATION விருதுகளையும் பெற்றுள்ளார்.

” வெற்றியும் தோல்வியும் யாருக்கும் நிரந்தரமில்லை என்று உணரும் தருணத்தில்தான், வெற்றி பெற்ற பின் வரும் ஆணவத்திலிருந்தும், தோல்வியடைந்த பின் வரும் மன அழுத்தத்திலிருந்தும் இலகுவாக வெளியேற முடியும். மேலும், செய்ய வேண்டிய பணிகளின் பாதை தெளிவாக தெரியும் என்பது வினோஜ்குமாரின் கோட்பாடு என தனது இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இளம் தமிழ் கண்டுபிடிப்பாளனுடன் கலந்துரையாடியபோதே அவர் இதனை கூறினார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: