”தமிழ்த் தேசியத்தின் காவலனே வருக” – கிளி.யில் விக்கிக்கு ஆதரவு

கிளிநொச்சி மாவட்டம் எங்கும் தமிழ் மக்கள் கூட்டணி கட்சித் தலைவர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழர் விரோதப் போக்கிற்கு எதிராக செயற்பட்டு தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுறுதியுடன் பயணித்ததற்காக கூட்டமைப்பின் தலைமையால் பல நெருக்கடிகளை அனுபவித்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார்.

 

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டம் எங்கும் முன்னாள் முதலமைச்சரின் கட்சியை வரவேற்றுச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  “தமிழ்த் தேசியத்தின் காவலனே! வருக! வருக!  தடை தகர்த்து  தமிழர் உம் உரிமை காக்க உங்களுடன் நாங்கள் ” ,   ” நீதியரசரே! நிலை தளராது தமிழ்த் தேசியத்துடன் நிற்கும் வரை உங்களுடன் நாங்கள் ” என்ற வாசகங்கள் சுவரொட்டிகளில் அச்சிடப்பட்டு வன்னி மக்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: