தமிழ்லீடர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் அரசுக்கு எச்சரிக்கை

ஐ.நா. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் இலங்கை மோசமான விளைவை சந்திக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “மூன்றாவது தடவையாக இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல், நீதி நியாயம், காணாமற்போனோர் விடயம், மீள் நிகழாமை, நல்லிணக்கம் மற்றும் அதிகாரம் சம்பந்தமாக – எல்லாக் கருமங்களும் முதல் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தீர்மானத்தையும் நாம் வரவேற்கின்றோம். இதனை முன்னின்று நிறைவேற்றிய பிரித்தானியா தலைமையிலான உலக நாடுகளுக்கும் நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். அதில் உள்ள பரிந்துரைகளை காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதை அரசு செய்யாமல் இருந்தால் அதன் விளைவுகள் வேறு விதமாக அதாவது மிகவும் பாரதூரமாக இருக்கும். ஐ.நா.வின் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத் தேவை இலங்கை அரசுக்கு இருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.

எழுநிலா

Add comment

Recent Posts

%d bloggers like this: