தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் இன்று காலை தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிகின்றனர்.
மேற்படி காலை 10.30 அளவில் ஏற்பட்ட இந்த தீ அனர்த்தத்தினால் 2 ஏக்கரிற்கு மேற்பட்ட பகுதி எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் தற்போது இந்த பிரதேசங்களில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் கடும் காற்று வீசுவதனால் தீயினைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தலவாக்கலை பொலிஸாரும், தலவாக்கலை விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர், பொது மக்களும் கடும் முயற்சிக்கு மத்தியில் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் தற்போது பல பிரதேசங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நீர்ப்பாசன வனப்பிரதேசங்களுக்கு தீ வைப்பதனால் மேலும் நீர்த்தட்டுப்பாடு உக்கிர நிலையை அடைய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்லது.
மேலும் இவ்வாறு தீ வைக்கும் விஷமிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டுமென பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.