தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் கூறுகின்றனர்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் நேற்று காலை 6 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் சென்ற பாதசாரதிகள், சடலமொன்று கிடப்பதை கண்டு தலவாக்கலை பொலிஸருக்கு தகவல் கூறியுள்ளனர்.

சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் சுமார் 65ற்கும் 70ற்கும் இடையிலான வயது மதிக்கதக்கவர் எனவும் மேலதிக விசாரணையை தலவாக்கலை பொலிஸார் மேற்கொள்வதாக குறியுள்ளனர்.

விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: