தமிழ்லீடர்

தாயின் அரவணைப்பு இல்லாமையால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!!!

13 வயதுடைய பாடசாலைச் சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மேற்படி நாலப்பிட்டி கல்லோயா பகுதியை சேர்ந்த 13 வயதுடைய துமேஸ் மதுஷன் என்ற சிறுவனே இவ்வாறு தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம் பெற்றுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் அந்த சிறுவன் நாவலப்பிடடி கிரின்வுட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்பவர் என தெரியவந்துள்ளது.எனவே குறித்த சிறுவனின் தாய் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் சிறுவனுக்கு தந்தை இல்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சிறுவன் தமது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.நேற்றய தினம் பாடசாலையின் ஊடாக சுற்றுலா பயணம் ஒன்று ஏற்பாடு செய்து இருந்தபோதும் அந்த சுற்றுலா பயணத்திற்கு குறித்த சிறுவன்செல்லவில்லை.வீட்டில் தனிமையில் இருந்த போது குறித்த சிறுவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில நாவலப்பிட்டி நீதிமன்ற நீதவான் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: