தமிழ்லீடர்

தாலிக்குளம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து மரணம்.

வவுனியா தாலிக்குளம் பகுதியில் கிணற்றில் இருந்து சிறுமி ஒருவரின் சடலத்தை பூவரசங்குளம் பொலிஸார் நேற்றயதினம்(13) மீட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,வவுனியா தாலிக்குளம் பகுதியில் நேற்றயதினம் தந்தையும், தாயும் தொழில் நிமித்தம் வெளியே சென்றுள்ளனர். 

மேலும் வேலைக்கு சென்றுவந்த தாய் மற்றும் சகோதரன் நீண்டநேரம் ஆகியும் குறித்த சிறுமியை காணாமையினால் தேடியுள்ளனர். அவர்களுடன் இணைந்து அயலவர்களும் தேடியுள்ளனர்.

எனினும் சிறுமியை காணாதநிலையில் அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டக் கிணற்றிற்கு அருகாமையில் சிறுமியின் ஆடைகள் இருந்துள்ளது.

அதனை அவதானித்த பின்னர் கிணற்றுக்குள் இறங்கி தேடியபோது நீரில் முழ்கிய நிலையில் சிறுமியின் சடலம் கிடப்பதை அவதானித்துள்ளனர். 

மேற்படி தகவல் பூவரசங்குளம் பொலிசாருக்கு தெரியபடுத்தபட்டது.

சடலத்தை மீட்ட பொலிசார் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். சம்பவத்தில் தாலிக்குளம் பகுதியை சேர்ந்த குமார் லோவிகா என்ற 14 வயது சிறுமியே இறந்துள்ளார்.

குறித்த சிறுமி தனது தாயுடன் வழமையாக அருகில் உள்ள கிணற்றிற்கு நீராட செல்வதாக அயலவர்கள் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: