தமிழ்லீடர்

திங்கட்கிழமை முதல் புதிய பஸ் கட்டணங்களை அறவிடாத பஸ்கள் சுற்றிவளைப்பு.

புதிய கட்டணங்களுக்கமைய பஸ் கட்டணங்களை அறவிடாத பஸ்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள், நாளை முதல் முன்னெடுக்கவிருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ் கட்டணங்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு திங்கட்கிழமை முதல் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கவிருப்பதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையால், தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்துக்குட்பட்ட 475 மார்க்கங்களில் சுமார் 5,500 பஸ்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றன. பஸ்களில் பயணிகள் கஷ்டத்துக்குள்ளாகும், பட்சத்தில், அறிவிப்பதற்கு மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் தொலைபேசி இலக்கமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் முறைப்பாடுகளை, 011 2 860 860 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: