திங்கட்கிழமை 26.11.2018 முதல் இணைய கணனி வசதிமூலம் ஆரம்பம்.

திங்கட்கிழமை 26.11.2018 முதல் இணைய கணனி வசதிமூலம் இலங்கையில் முழு இடங்களிளும் பதிவு செய்யப்பட்டுள்ள மக்கள் தங்களின் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை பெற்றுக் கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மேலதிக பதிவாளர் நாயகமுமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

பொதுமக்கள் இதற்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து உரிய கட்டணத்தினை செலுத்தி உடனடியாக பிரதிகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் காலததின் வீண் விரயத்தினையும் பண விரயத்தினையும் தவிர்க்கும் முறையில் அரசாங்கம் இவ்வகையான செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ் விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்த மாவட்டச் செயலாளர், தற்போது அந்தந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளில் மாத்திரமே பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்  விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை நாட்டின் எப்பாகத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அமையப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

1960ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையான பதிவுகளை திங்கட்கிழமை முதல் வார நாட்களில் பெற்றுக் கொள்ள முடியும்.
இதே போன்று இலங்கையில் மாகாண ரீதியான வலய அலுவலகங்களிலும், மாவட்ட ரீதியில் மாவட்ட அலுவலகங்களிலும் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை வழங்கும் இணையக் கணனி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: