தமிழ்லீடர்

திருகேதீஸ்வர கோவிலின் நுழைவாயிலை உடைத்த 10 பேர் சரணடைந்துள்ளனர்!

மன்னார் – மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த  திருகேதீஸ்வர கோவிலின் அலங்கார நுழைவாயில் உடைத்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள், சட்டத்தரணி ஊடாக இன்று காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருட்தந்தை ஒருவர் உட்பட 10 பேரே, இன்று காலை சட்டத்தரணி ஊடாக, மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன்,
இவர்களில் மூன்று பெண்களும், ஆறு ஆண்களும் அடங்கியுள்ளனர்.

குறித்த 10 பேரிடமும் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட மன்னார் பொலிஸார், அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன்,
இதன்போது விசாரனைகளை மேற்கொண்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ, அருட்தந்தையை சொந்தப் பிணையிலும், ஏனைய 9 பேரையும் 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் செல்ல அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, வழக்கு விசாரணைகள், இம்மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.                           

Add comment

Recent Posts

%d bloggers like this: